உங்கள் கணனி எந்த அளவு பாதுகாப்பாக இருக்கின்றது என்பதனை கணக்குப் போட்டு காட்டும் இலவச மென்பொருள்.


சான் ஏற முழம் சருகும் என்பது போல வேகமாக முன்னேறிவரும் தொழில்நுட்ப மாற்றங்களை விட அந்நுட்பங்களை மிக மிக நுட்பமாக நோக்கி சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரின் அளவும் வன்மை செயல்களின் பெருக்கமும் Jet வேகத்தையே தோற்கடித்துவிடும் போலுள்ளது. இதற்கேற்றாற்போல் அண்மையில் 250000 twitter கணக்குகள் திருடப்பட்டிருந்ததுடன் நேற்று (3/2/2013) எனது சகோதரரின் ebay, yahoo, gmail ஆகிய மூன்று கணக்குகளும் ஒரே சந்தர்பத்தில் திருடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் எமது கணனியின் பாதுகாப்பை பேணுவது முக்கியத்துவம் பெறுகின்றது.
OPSWAT எனப்படும் மென்பொருள் எமது கணணி எந்த அளவு பாதுகாப்பாக இருக்கின்றது என்பதனை கணக்கு போட்டு காட்டுகின்றது. அதுமட்டுமல்லாமல் எமது கணனியின் பாதுகாப்பு தொடர்பில் பலவீனமாக இருக்கும் அம்சங்களை துல்லியமாக காட்டுவதுடன் அதற்கான தீர்வையும் தருகின்றது. இதனை கணனியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை என்பதுடன் இதனை இலவசமாக தரவிறக்கிக்கொள்ள முடியும். 
-->
antivirus, antiphishing, backup, patch management, firewall, public file sharing, hard disk encryption மற்றும் மூன்றாம் நபர் மென்பொருள் தொடர்பில் சிறந்த முடிவுகளையும் தீர்வையும் தரும் இந்த மென்பொருளை அனைவராலும் இலகுவாக பயன்படுத்தி பயன்பெற முடியும்.
இதனை தரவிறக்க கீழுள்ள இணைப்பில் செல்லவும்.
Sources : topsoftdown