இணையபக்கங்களில் ஆரம்பிக்கபட்ட நம்முடைய தனிப்பட்ட கணக்கு களை நீக்கம் செய்திட..

நாம் இணையத்தை பயன்படுத்திடும்போது ஒவ்வொரு இணைய பக்கத்திற்கும் உள்நுழைவதற்குமுன் நம்மை பற்றிய தனிப்பட்ட தகவல்களை உள்ளீடு செய்து பயனாளர் பெயர் கடவுச்சொற்கள் ஆகியவற்றின்மூலமாக  நமக்கென தனியாக ஒரு கணக்கினை ஆரம்பித்தபிறகே நம்மை Twitter, PayPal, Facebook என்பன போன்ற   இணைய பக்கங்கள் நம்மை உள்நுழைவுசெய்ய அனுமதிக்கின்றன அதன்பின்  நம்முடைய பல்வேறு பணிச்சுமைகளின் காரணமாக இந்த இணைய பக்கத்திற்கு மிக நீண்ட நாட்களாக செல்லாமல் இருந்துவிடுவோம் பின்னர் மீண்டும் இதே இணைய பக்கத்தில் உள்நுழைவுசெய்யலாம் என  முயன்றிடும்போது நாம் நம்முடைய கணக்கினை உருவாக்கிடும்போது தயார்செய்த  பயனாளர் பெயர் கடவுச்சொற்கள் ஆகியவை நினைவில் இருந்தால் பரவாயில்லை மறந்து போனபோது புதிய கணக்கினை மீண்டும் ஆரம்பிக்க வேண்டிய சூழல் ஏற்படுகின்றது  இந்நிலையில் நாம் ஏற்கனவே வழங்கிய  நம்மை பற்றிய தனிப்பட்ட தகவல்கள் என்ன ஆவது  மிகமுக்கியமாக நாம் நீண்ட நாட்களாக Orkut,My Space,Skypeஆகிய இணைய பக்கங்களில்  பயன்படுத்தாத போது நம்மை பற்றிய  தனிப்பட்ட தகவல்கள் என்னாவாது மிகமுக்கியமாக  Skypeஇல்  நம்மை பற்றிய  தனிப்பட்ட தகவல்களுடன் நமக்கென ஒரு கணக்கினை ஆரம்பித்தபின் பயன்படுத்தாத பேது அதனை அழித்து நீக்கம் செய்ய அனுமதிக்காது  இது சரியான நடைமுறையா என யோசித்து பாருங்கள்
இவ்வாறானநிலையில்   http://wikicancel.org/ என்ற முகவரியில் செயல்படும் wikicancel.org  என்ற தளமானது கட்டணம் ஏதுமில்லாமல் paybal முதல்  netfix வரை நாம் ஆரம்பித்த நம்முடைய தனிப்பட்ட கணக்கு களை பல்வேறு படிமுறைகளை பின்பற்றி  நீக்கம் செய்திட  முடியும்
7.1