திரையில் Recycle Bin இல்லாத போது தவறுதலாக நீக்கம் செய்த கோப்பினை எவ்வாறு மீட்டெடுப்பது...

 

நாம் நம்முடைய கணினியில் delete என்ற  கட்டளையின் மூலம் நீக்கம் செய்கின்ற கோப்புகள் அனைத்தும் கணினியானது முதலில் குப்பைக்கூடையான Recycle Bin என்பதில் கொண்டு  சென்று சேர்க்கின்றது பின்னர்  மனம் மாறி அடடா நாம் நீக்கம் செய்த கோப்பு இருந்தால் நன்றாக இருக்குமே என தடுமாறும்போது உடன் நேராக கணினித்திரையில் இந்த குப்பைகூடையின்  உருவபொத்தானை  தெரிவுசெய்து சொடுக்கிய பின் விரியும் Recycle Bin என்ற திரையில் நாம் நீக்கம் செய்த கோப்புகள் பட்டியலாக தோன்றிடும் அதில் தேவையான கோப்பினை தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் விரியும் குறுக்குவழி பட்டியில் Restore  என்ற கட்டளையை தெரிவுசெய்து செயற்படுத்தியவுடன் அந்த கோப்பு பழைய இடத்திற்கு வந்து சேரும் என்ற செய்தி நாம் அனைவரும் அறிந்ததே
ஆயினும்  Recycle Bin என்ற உருவ பொத்தானே கணினித்திரையில் இல்லாத போது தவறுதலாக நீக்கம் செய்த கோப்பினை எவ்வாறு மீட்டெடுப்பது என்ற சிக்கல் எழும் .அவ்வாறான நிலையில்  இடம்சுட்டியை கணினித்திரையில் ஏதேனுமொரு காலியான இடத்தில் வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் குறுக்குவழி பட்டியில்  personalize என்ற கட்டளையை தெரிவுசெய்து செயற்படுத்துக உடன்  விரியும்   personalize என்ற திரையில்  change desktop icons என்ற கட்டளையை தெரிவுசெய்து செயற்படுத்துக உடன்  விரியும்   desktop icons settingsஎன்றஉரையாடல் பெட்டியில்   Recycle Bin என்பதற்கருகிலுள்ள தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்து கொண்டு apply, OK ஆகிய பொத்தான்களை  தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின்னர் கணினித்திரையில் Recycle Bin என்ற உருவ பொத்தான் தோன்றிடும
6.1