ஏதேனும் படத்தின்மீது உள்ள எழுத்துகள் அல்லது வருபட்ட படநகலாக இருக்கும் எழுத்துகளை மீண்டும் அவைகள் முழுவதையும் தட்டச்சு செய்வது அல்லது ஏதேனும் ஒரு OCR மென்பொருளை கொண்டு அவ்வெழுத்துகளை மீட்டெடுப்பது ஆகிய இருவழிகளில் மட்டுமே நம்முடைய ஆவணத்தில் இவைகளை கொண்டு வந்து சேர்த்திட முடியும் இந்த OCR மென்பொருளை கொண்டு அவ்வெழுத்துகளை மீட்டெடுத்திடும்போது 100% துல்லியமாக இருக்கும் என உத்திரவாதம் கிடையாது அதனால் அதில் சில திருத்தங்களை தட்டச்சு செய்வதன் வாயிலாக இதனை சரியான உரையாக செய்யமுடியும் இதற்கு பதிலாக நம்முடைய கணினியில் எம்எஸ் ஆஃபிஸ் இருந்தால் அதன்மூலம் படத்தின்மீது உள்ள எழுத்துகள் அல்லது வருபட்ட படநகலாக இருக்கும் எழுத்துகளை மீண்டும் அவைகள் முழுவதையும் தட்டச்சு செய்வது அல்லது OCR மென்பொருள் இல்லாமல் துல்லியமான உரையாக கொண்டுவரமுடியும் இதற்காக நம்முடைய கணினியில் Microsoft Office OneNote என்ற பயன்பாடு உள்ளதாவென சரிபார்த்து கொல்க பின்னர் Start–=>All Programs=>Microsoft Office=>Microsoft Office OneNote=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவதன் வாயிலாக அதனை செயல்பட செய்க அதன்பின்னர் எழுத்துகள் உள்ள படத்தினை அல்லது உருவ படத்தை இடம்சுட்டியால் பிடித்து இழுத்துவந்து Microsoft Office OneNote என்ற பயன்பா ட்டில் விட்டிடுக அல்லது நகலெடுத்து ஒட்டிகொள்க. பின்னர் ஒன்நோட்டில் ஒட்டிய எழுத்துகள் உள்ள படத்தின்து இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் குறுக்குவழி பட்டியலில் Copy Text From Picture என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் எம்எஸ் வேர்டு அல்லது நோட்பேடை திறந்துகொண்டு இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் குறுக்குவழி பட்டியலில் paste என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக
உடன் படத்தின்மீது உள்ள எழுத்துகள் அல்லது வருபட்ட படநகலாக இருக்கும் எழுத்துகள் நம்முடைய பயன்பாட்டில் Xtra Power ,Windows x என்றவாறு வந்து சேர்ந்துவிடும் அதன்பின்னர் அதனை தேவையானவாறு சரிசெய்து அமைத்து கொள்க
![5.1](http://vikupficwa.files.wordpress.com/2013/04/5-11.jpg?w=535)