கோப்பினை யாருடைய கண்ணிலும் தென்படாது மறைத்து வைத்தல்

 

மிக முக்கியமான கோப்புகளை skofficefile என்றவாறான  தனியான கோப்பகத்திற்குள்  நம்மால் பாதுகாப்பாக  வைத்து பராமரித்து வரும்போது இந்த கோப்பகத்தை வேறுஎவரும் நம்முடைய கணினியில் தேடிடும்போது காணமுடியாதவாறு செய்தால் நம்முடைய கோப்புகள் பாதுகாப்பாக இருக்கும் என எண்ணிடுவோம் .அந்நிலையில் start=>Run=>  என்றவாறு கட்டளைகளை அல்லது விசைப்பலகையில் windowkey => Run=>என்றவாறு விசைகளை அழுத்துக உடன் தோன்றிடும்   Run என்ற உரையாடல் பெட்டியில் cmdஎன தட்டச்சு  செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக 4.1
4.1
பின்னர் தோன்றிடும் கருப்பு வெள்ளையில் தோன்றிடும் கட்டளைவரியை செயற்படுத்துவதற்கான திரையில் attrib+s +h D:\skofficefile என்ற வாறு தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக இதன் பின்னர் நம்முடைய கோப்பகமான skofficefile என்பது நம்முடைய கணினியில் தேடிடும்போது யாருடைய கண்ணிலும் தென்படாது  அதன்பிறகு நம்முடைய கண்களால் காணுமாறு செய்வதற்கு இதே   கட்டளைவரியை செயற்படுத்துவதற்கான திரையில் attrib-s -h D:\skofficefile என்ற வாறு தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக
4.2