இதற்க்கு தேவையான அகால உயரங்களை அளக்க, தேவையான வண்ணங்களை எடுக்க, ஒரு படத்தில் (image) இருந்து தேவையான பகுதிகளை கேப்சர் முறையில் பிரித்தெடுக்க என அணைத்து வேலைகளையும் ஒரு சிறிய இலவச மென்பொருள் மூலம் பெறலாம். மென்பொருளின் பெயர்: பேடன் மீசெர் டூல்ஸ்.
1. ஸ்க்ரீன் காப்ட்சர்
இந்த மீசெர் டூல்ஸ் மூலம் ஸ்க்ரீனை பிரிண்ட் செய்யலாம். இதற்க்கு கீபோர்டில் விண்டோஸ் கீ மற்றும் எஸ் கீ அழுத்தவும், இப்போது உங்களுக்கு தேவையான பகுதியை தேர்ந்தெடுத்து கிளிக் செய்யவும். பின்பு எம் எஸ் பெயின்ட் திறந்து பேஸ்ட் செய்து சேமித்துக்கொள்ளலாம்.
2 . கலர் கிராபர்
திரையில் நீங்கள் காண்கின்ற எந்த ஒரு நிறத்தையும் காப்ட்சர் செய்து அந்த நிறத்தின் எண்னை பெறலாம் (color code). இதற்க்கு சிஸ்டம் டிரேயில் உள்ள சிவப்பு நிற ஐகனை கிளிக் செய்து கலர் க்ராபெரில் உள்ள இங்க் பில்லர் ட்ரோப்பறை நீங்கள் விரும்பிய நிறத்தின் மீது ட்ராக் செய்வதன் மூலம் அதன் நிற ஹெக்ஸ் எண்களை காணலாம். RGB எண்களையும் காணலாம்.
3. அகால உயரங்களை அளக்க
வலைதளத்தில் படிவங்களுக்கு சரியான அகால உயரங்களை அளவீட இதில் வசதி உள்ளது. இதன் மூலம் சரியான அளவீடுகளை தரலாம். இந்த வசதியை பெற கீபோர்டில் விண்டோஸ் கீ மற்றும் சி கீயை ஒரு சேர அழுத்தினால் போதுமானது
மீசெர் டூல்ஸ் மேலும் பல சிறப்பு தன்மைகளை கொண்டுள்ளது. வலைமனை வடிவமைப்பாளர்கள் அனைவருக்கும் இது மிக முக்கியமான கருவியாக செயல்படுகிறது.