இதில் பெருமைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் விண்டோஸ் 7 மற்றும் ஆபீஸ் 2010 தயாரிப்பில் பெருமளவு தமிழர்களையே பயன்படுத்தி இருக்கிறார்கள். காலரை உயர்ற்றி கொள்ளுங்கள்.
ஆபீஸ் 2010 புதுசா என்ன இருக்கு ?
ஆபீஸ் 2007 விட பல சிறப்பு தன்மைகள் ஆபீஸ் 2010ல் உள்ளதாக மைக்ரோசாப்ட் தெரிவிக்கிறது
1. திரையை பதிவு செய்யும் வசதி (Built-In Screen Capture)
2. கண்ட்ரோல் பானல்
ஆபீஸ் தொகுப்புக்கு தனியாக ஒரு கண்ட்ரோல் பானல் உள்ளது, இதன் மூலம் ஆபீஸ் தொகுப்பை உங்கள் வசதிக்கு தகுந்தவாறு மாற்றிகொள்ளலாம்.
3. பவர்பாய்ன்ட் 2010 - புதிய டெம்ப்ளேட்டுகள்
ஆபீஸ் 2010 - பவர்பாய்ன்ட் பல வடிவமைக்கப்பட்ட டெம்ப்ளேட்டுகள் உள்ளடங்கி உள்ளது, இதன் மூலம் உங்களுக்க தேவையான டெம்ப்ளேட் தேர்வு செய்து நீங்கள் விரும்பியவாறு வடிவமைத்துக் கொள்ளலாம்.
4. வடிவமைக்கப்பட்ட பின்புல நிறம்
ஆபீஸ் தொகுப்பில் உள்ள அனைத்து மென்பொருளிலும் பின்புல நிறம் மாற்றப்பட்டுள்ளது கிழே உள்ள படத்தை பார்க்கவும்
5. ப்ளாஷ் திரை (Splash screen)
ஆபீஸ் 2010 தொகுப்பில் உள்ள வோர்ட், எக்ஸ்செல் பவர்பாய்ன்ட் ப்ளாஷ் திரை முற்றிலும் புதிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
6. சோசியல் கனக்டர்
இது மின்னஞ்சல் / குறுஞ்செய்தி பரிமாற்றம் அடிபடையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அலுவலகங்களில் அதிகமாக இது உபோயோகப்படும். அலுவலத்தில் பணி புரிபவர்கள் இடையே செய்தி பரிமாற்றத்திற்கு முக்கிய பங்காற்றுகிறது.
7. புதிய திறனுடன் அவுட்லுக் 2010
அவுட்லுக் 2010ல் இப்போது அதிக கொள்ளளவு கொண்ட மின்னஞ்சல்களை சேமித்துக் கொள்ளலாம். நீங்கள் விருப்பட்டால் தற்போது தேவை இல்லாத மின்னஞ்சல்களை சுருக்கி பதிந்து கொள்ளலாம். இந்த வசதி இப்ப அவுட்லுக் 2010ல் உள்ளது
8. மேம்படுத்தப்பட்ட பவர்பாய்ன்ட் 2010
பவர்பாய்ன்ட் 2010 இப்போது நல்ல முறையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. முதல் தரமான ப்ரெசென்ட்டேசன் தயாரிக்க, விரும்பிய அனிமேசன் கொடுக்க, ஸ்லைட் அனிமேசன், ஆடியோ, வீடியோ என பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
9. தொழில்நுட்ப புரட்சியில் எக்ஸ்செல் 2010
இதில் இல்லாத அம்சங்களே இல்லை என சொல்ல கூடிய அளவுக்கு அனைத்து வகையான சிறப்புயல்புகளும் இப்போது எக்ஸ்செல் 2010ல் உள்ளது. டேட்டாவை கையாள்வதில் இனி எக்ஸ்செல்க்கு நிகர் எக்ஸ்செல் தான்.
10. புதிய வசதிகளோடு வோர்ட் 2010
வோர்ட் 2010ல் பற்பல புதிய வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது. படங்களை கையாளும் போது பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது, மேலும் பல விசுவல் எபக்ட் இதில் உள்ளது. பெரிய கோப்புகளை கையாளும்போது எளிதாக செய்வதற்க்கான வசதிகளை கொண்டுள்ளது.
இதை தவிர மேலும் பற்பல வசதிகள் ஆபீஸ் 2010ல் இருக்கின்றது. சான்றாக இதில் வலைமனையில் திறம்பட பணிபுரிய பல வசதிகள் உள்ளது மற்றும் இதன்மூலம் கைபேசியை கையாளலாம்.
ஆபீஸ் 2010 ஆறு வகைகளில் வெளிவர இருக்கிறது அவை ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு, மாணவர்கள் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு, பிசினெஸ் பதிப்பு, ஸ்டாண்டர்ட் பதிப்பு, ப்ரோபோசனால் மற்றும் ப்ரோபோசனால் பிளஸ்
ஆபீஸ் 2010 Home தொகுப்பினை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
ஆபீஸ் 2010 பயன்படுத்த: 500Mz ப்ரோசெசார் அல்லது அதற்க்கு மேல், ராம் 250MB
அல்லது அதற்க்கு மேல், வன்தட்டில் 1.5 GB இடம் அல்லது அதற்க்கு மேல், மற்றும் விண்டோஸ் XP SP3 அல்லது விஸ்டா அல்லது விண்டோஸ் 7
மேலதிக தகவலுக்கு இங்கே சொடுக்கவும்.