அடோப் அக்ரோபேட் ரைட்டர் எனும் மென்பொருள் நம்மிடம் இருந்தால்
மட்டுமே நம்மால் எந்தவொரு ஆவணத்தையும் பிடிஎஃப் கோப்பாக உருமாற்றம்
செய்யமுடியும் என தவறான எண்ணம் நம்மில் பெரும்பாலா னோருக்கு உள்ளன.
ஆயினும் தற்பேது ஓப்பன் ஆஃபிஸில் அல்லது லிபர் ஆஃபிஸில் எந்தவொரு
ஆவணத்தையும் பிடிஎஃப் கோப்பாக உருமாற்றம் செய்யமுடியும் ஆனால் நம்மிடம்
ஓப்பன் ஆஃபிஸ் அல்லது லிபர் ஆஃபிஸ் இல்லாவிட்டால் BullZip என்ற
பயன்பாட்டினை கொண்டு எந்தவொரு ஆவணத்தையும் பிடிஎஃப் கோப்பாக உருமாற்றம்
செய்யமுடியும். இதற்காக
http://www.bullzip.com/products/pdf/info.php#download
என்ற இணைய பக்கதிற்கு சென்று Bullzip PDF Printer என்ற மென்பொருளை
நம்முடைய கணினியில் பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவியபின்
கணினியின் இயக்கத்தை நிறுத்தம் செய்து மறுதொடக்கம் செய்திடுக
பின்னர் எந்தவொரு பயன்பாட்டிலும் File => Print …=> என்றவாறு
கட்டளைகளை தெரிவுசெய்து செயற்படுத்துக அதன் பின்னர் விரியும் print என்ற
உரையாடல் பெட்டியில் Printer என்பதன்கீழ் Bullzip PDF Printer என்பதை
தெரிவுசெய்து கொண்டு OK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்
தோன்றிடும் திரையில் உருவாகும் பிடிஎஃப் கோப்பினை சேமித்து வைத்திடும்
இடத்தினை மட்டும் தெரிவுசெய்தவுடன் நாம் விரும்பிய ஆவணம் பிடிஎஃப் கோப்பாக
ஒரு சில நிமிடங்களில் உருமாறி விடும்